• Jul 31 2026

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல தடை - மீனவர்களுக்கு எச்சரிக்கை

Chithra / Jul 30th 2026, 2:29 pm
image


வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய வானிலை அறிக்கையைத் தொடர்ந்து, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமும் கடல் கொந்தளிப்பும் அதிகரித்துள்ளதால், மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.


கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்பிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனையடுத்து, குறித்த கடற்பரப்புகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய ரகப் படகுகள் மற்றும் பாரம்பரியப் படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள படகுகள் இருப்பின், அவை உடனடியாக பாதுகாப்பாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், கடற்றொழிலுக்காக புறப்படும் தருணத்திலிருந்து கடலில் தொழிலில் ஈடுபடும் நேரம் மற்றும் மீண்டும் கரை திரும்பும் வரை பாதுகாப்பு அங்கிகளை (Life Jackets) கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், கடலில் இடம்பெறும் பல விபத்துகளுக்கு படகுகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அமைவதால், கடலுக்குச் செல்வதற்கு முன்னர் படகுகளின் எஞ்சின், இயந்திரத் தொகுதிகள் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளிட்டவற்றை முழுமையாக பரிசோதிக்குமாறும் படகு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப ரீதியாக தகுதியான படகுகளை மட்டுமே கடலுக்கு அனுப்புவதை உறுதி செய்யுமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.


இதேவேளை, கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான ஏனைய கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் நிலவும் அலைகளின் தன்மையை அவதானித்து, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கடற்றொழிலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் அவ்வப்போது வெளியிடும் உத்தியோகபூர்வ வானிலை மற்றும் கடல் பாதுகாப்பு அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும், அவசர நிலை ஏற்பட்டால் பொறுப்புடன் செயற்படுமாறும் அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல தடை - மீனவர்களுக்கு எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய வானிலை அறிக்கையைத் தொடர்ந்து, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமும் கடல் கொந்தளிப்பும் அதிகரித்துள்ளதால், மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்பிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து, குறித்த கடற்பரப்புகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய ரகப் படகுகள் மற்றும் பாரம்பரியப் படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள படகுகள் இருப்பின், அவை உடனடியாக பாதுகாப்பாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், கடற்றொழிலுக்காக புறப்படும் தருணத்திலிருந்து கடலில் தொழிலில் ஈடுபடும் நேரம் மற்றும் மீண்டும் கரை திரும்பும் வரை பாதுகாப்பு அங்கிகளை (Life Jackets) கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், கடலில் இடம்பெறும் பல விபத்துகளுக்கு படகுகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அமைவதால், கடலுக்குச் செல்வதற்கு முன்னர் படகுகளின் எஞ்சின், இயந்திரத் தொகுதிகள் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளிட்டவற்றை முழுமையாக பரிசோதிக்குமாறும் படகு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொழில்நுட்ப ரீதியாக தகுதியான படகுகளை மட்டுமே கடலுக்கு அனுப்புவதை உறுதி செய்யுமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான ஏனைய கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் நிலவும் அலைகளின் தன்மையை அவதானித்து, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கடற்றொழிலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் அவ்வப்போது வெளியிடும் உத்தியோகபூர்வ வானிலை மற்றும் கடல் பாதுகாப்பு அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும், அவசர நிலை ஏற்பட்டால் பொறுப்புடன் செயற்படுமாறும் அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement