• May 06 2025

வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வாக்குப் பெட்டிகள்..!

Sharmi / May 5th 2025, 10:11 am
image

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளிடம் கையளிக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 அந்தவகையில் யாழ் மாவட்டத்தில், இன்றைய தினம்(05) காலை 08.18 மணிக்கு முதலாம் கட்ட பேருந்துக்களில் - ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேருந்து யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்து புறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் சசீலன் , தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன் , மேலதிக மாவட்ட  செயலாளரும் (காணி) நலனோம்பல்  உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான க.ஸ்ரீமோகனன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


கிளிநொச்சி 

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கான வாக்கப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்திருந்தார்.

மாவட்டத்தில் 102387 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 

இதற்காக வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் அவ்வந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது.

இந்த தேர்தல் பணிகளுக்காக 1450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.


முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள  உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.

அதில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் , துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், மாந்தைகிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 87800 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று (05) காலை 7.30 மணி முதல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சிந்துசாவின்  ஏற்பாட்டில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 137 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள், ஆவணங்கள் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இருந்து இன்று காலை முதல் அனுப்பி அனுப்பி வைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு பெற்று இன்று காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலையில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்கு நிலையங்கள்,வாக்கெண்ணும் நிலையங்களில் கடமையாற்றுவதற்காக சுமார் 6000அரச ஊழியர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு தேர்தல் செயற்பாடுகளுக்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் செல்லப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 610,117 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை மற்றும், அட்டன், டிக்கோயா ஆகிய நகர சபைகளுக்கும், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை மற்றும் கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்குமான 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 

வாக்களிப்பு நிலையங்களில் 6,352 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாருமாக 1500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

12 சபைகளுக்கும், 300 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 2485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வாக்குப் பெட்டிகள். நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளிடம் கையளிக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்தில், இன்றைய தினம்(05) காலை 08.18 மணிக்கு முதலாம் கட்ட பேருந்துக்களில் - ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேருந்து யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்து புறப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் சசீலன் , தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன் , மேலதிக மாவட்ட  செயலாளரும் (காணி) நலனோம்பல்  உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான க.ஸ்ரீமோகனன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கான வாக்கப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்திருந்தார்.மாவட்டத்தில் 102387 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் அவ்வந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது.இந்த தேர்தல் பணிகளுக்காக 1450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள  உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.அதில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் , துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், மாந்தைகிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.முல்லைத்தீவு மாவட்டத்தில் 87800 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று (05) காலை 7.30 மணி முதல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சிந்துசாவின்  ஏற்பாட்டில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த தேர்தலில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 137 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.வவுனியாவவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள், ஆவணங்கள் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இருந்து இன்று காலை முதல் அனுப்பி அனுப்பி வைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்புமட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு பெற்று இன்று காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலையில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்கு நிலையங்கள்,வாக்கெண்ணும் நிலையங்களில் கடமையாற்றுவதற்காக சுமார் 6000அரச ஊழியர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அத்தோடு தேர்தல் செயற்பாடுகளுக்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நுவரெலியாநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் செல்லப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 610,117 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை மற்றும், அட்டன், டிக்கோயா ஆகிய நகர சபைகளுக்கும், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை மற்றும் கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்குமான 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் 6,352 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாருமாக 1500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.12 சபைகளுக்கும், 300 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 2485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement