கிளிநொச்சி பூநகரி கடற்பரப்பில் நேற்றிரவு சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் முற்படுத்திய போது 36பேரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவித்தார்.
அத்துடன் மீனவர்கள் பயன்படுத்திய ஆறு படகுகளும் ஏழு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு எதிர்வரும் 05ம் மாதம் 07ம் திகதிக்கு தவணையிடப்பட்டது.
பூநகரியில் நேற்று கைதான 36 மீனவர்களுக்கு பிணை கிளிநொச்சி பூநகரி கடற்பரப்பில் நேற்றிரவு சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் முற்படுத்திய போது 36பேரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவித்தார்.அத்துடன் மீனவர்கள் பயன்படுத்திய ஆறு படகுகளும் ஏழு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு எதிர்வரும் 05ம் மாதம் 07ம் திகதிக்கு தவணையிடப்பட்டது.