வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு யாழில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“வீதி விபத்தை தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (09) காலை 8 மணியளவில் இளவாலை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மெய்கண்டான் பாடசாலை வரை நடைபவனி நடைபெற்றது.
இதன்போது விதிகளை மதிப்பது உயிரைக் காப்பது, மதிபடாத சிக்னல் மரணத்தின் அழைப்பிதழ், ஒரு நிமிடம் பொறுமை ஒரு வாழ்நாள் பாதுகாப்பு” ஆகிய வாசகங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு சார்ந்த பதாதைகளை தாங்கியவாறு நடைபவனியில் ஈடுபட்டனர்.
விழிப்புணர்வு நடைபவனியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர், வலி வடக்கு பிரதேச சபை செயலாளர், தெல்லிப்பழை சுகதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள், தெல்லிப்பழை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், இளவாலை காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு யாழில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “வீதி விபத்தை தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (09) காலை 8 மணியளவில் இளவாலை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மெய்கண்டான் பாடசாலை வரை நடைபவனி நடைபெற்றது. இதன்போது விதிகளை மதிப்பது உயிரைக் காப்பது, மதிபடாத சிக்னல் மரணத்தின் அழைப்பிதழ், ஒரு நிமிடம் பொறுமை ஒரு வாழ்நாள் பாதுகாப்பு” ஆகிய வாசகங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு சார்ந்த பதாதைகளை தாங்கியவாறு நடைபவனியில் ஈடுபட்டனர்.விழிப்புணர்வு நடைபவனியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.மேலும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர், வலி வடக்கு பிரதேச சபை செயலாளர், தெல்லிப்பழை சுகதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள், தெல்லிப்பழை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், இளவாலை காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.