திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தின் முதல் பாடசாலையான பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவணி இன்று இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் ஏ.பீ.ஏ.ஜப்பார் தலைமையில் இவ் நடைபவணி இடம்பெற்றது.
பாடசாலை முன்றலில் ஆரம்பமான நடைபவணி சேருவில வீதி, மத்திய வீதி, தோப்பூர் பிரதான வீதியூடாக பயணித்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
பாடசாலையின் நூற்றாண்டு நடைபவணியில் தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள், பழைய மாணவிகள், பாடசாலையின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தந்தமை குறிப்பிடத்தக்கது.
தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வு நாளை (23) இடம்பெறவுள்ளது.
இதில் சாதனை படைத்த மாணவிகள், முன்னாள் அதிபர்கள், பாடசாலையில் கற்பித்து ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர்கள் என பலரும் கௌரவிக்கப்பட உள்ளனர்.
பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவணி திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தின் முதல் பாடசாலையான பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவணி இன்று இடம்பெற்றது.பாடசாலை முதல்வர் ஏ.பீ.ஏ.ஜப்பார் தலைமையில் இவ் நடைபவணி இடம்பெற்றது.பாடசாலை முன்றலில் ஆரம்பமான நடைபவணி சேருவில வீதி, மத்திய வீதி, தோப்பூர் பிரதான வீதியூடாக பயணித்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.பாடசாலையின் நூற்றாண்டு நடைபவணியில் தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள், பழைய மாணவிகள், பாடசாலையின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தந்தமை குறிப்பிடத்தக்கது.தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வு நாளை (23) இடம்பெறவுள்ளது.இதில் சாதனை படைத்த மாணவிகள், முன்னாள் அதிபர்கள், பாடசாலையில் கற்பித்து ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர்கள் என பலரும் கௌரவிக்கப்பட உள்ளனர்.