நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொலைத் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறும் தவறான சமூக ஊடக செய்திக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவினால் இன்று காலை இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.
யூடியூப் செய்தி தளமொன்றின் மூலம் இவ்வாறான தவறான கூற்றுகள் பரப்பப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் அதிகாரத்திற்கு வர உதவும் வகையில், பாதாள உலக தொடர்புகளைப் பயன்படுத்தி, தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஒருவரைக் கொல்ல நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சதி செய்வதாக யூடியூப் செய்தி தளம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமல் கொலைத் திட்டத்தில் ஈடுபட்டாரா - சிஐடியில் முறைப்பாடு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொலைத் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறும் தவறான சமூக ஊடக செய்திக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவினால் இன்று காலை இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. யூடியூப் செய்தி தளமொன்றின் மூலம் இவ்வாறான தவறான கூற்றுகள் பரப்பப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் அதிகாரத்திற்கு வர உதவும் வகையில், பாதாள உலக தொடர்புகளைப் பயன்படுத்தி, தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஒருவரைக் கொல்ல நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சதி செய்வதாக யூடியூப் செய்தி தளம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.