• Aug 06 2026

24 மணி நேர மண்சரிவு அபாயம்: பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

Chithra / Aug 6th 2026, 12:15 pm
image


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.


இந்த எச்சரிக்கை இன்று (06) காலை 9.00 மணி முதல் நாளை (07) காலை 9.00 மணி வரையான 24 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நிலை 2 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கண்டி மாவட்டம்:

உடபலத, டோலுவ, மெததும்பர, தெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்கா இஹல கோரளை மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்கள்.


கேகாலை மாவட்டம்:

அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேசங்கள்.


நுவரெலியா மாவட்டம்:

நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகள்.


இரத்தினபுரி மாவட்டம்:

ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்கள் ஆகிய பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை, நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை பின்வரும் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.


கேகாலை மாவட்டம்: கேகாலை.

இரத்தினபுரி மாவட்டம்: நிவித்திகல மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


தொடர்ச்சியாக மழை பெய்யும் பகுதிகளில் மண் மேடுகளில் ஏற்படும் விரிசல்கள், நிலம் தாழ்வடைதல், பாறைகள் உருண்டு விழுதல் போன்ற மண்சரிவு அபாய அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு NBRO பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


மேலும், அவசர நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

24 மணி நேர மண்சரிவு அபாயம்: பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.இந்த எச்சரிக்கை இன்று (06) காலை 9.00 மணி முதல் நாளை (07) காலை 9.00 மணி வரையான 24 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நிலை 2 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டம்:உடபலத, டோலுவ, மெததும்பர, தெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்கா இஹல கோரளை மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்கள்.கேகாலை மாவட்டம்:அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேசங்கள்.நுவரெலியா மாவட்டம்:நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகள்.இரத்தினபுரி மாவட்டம்:ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்கள் ஆகிய பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை பின்வரும் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.கேகாலை மாவட்டம்: கேகாலை.இரத்தினபுரி மாவட்டம்: நிவித்திகல மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் பகுதிகளில் மண் மேடுகளில் ஏற்படும் விரிசல்கள், நிலம் தாழ்வடைதல், பாறைகள் உருண்டு விழுதல் போன்ற மண்சரிவு அபாய அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு NBRO பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், அவசர நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement