• Jan 13 2026

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் நியமனம்!

dileesiya / Jan 12th 2026, 3:17 pm
image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மற்றும் வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் விசேட வைபவம் நேற்று (11) கிண்ணியாவில் நடைபெற்றுள்ளது.


கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர் ஹில்மி முகைதீன்பாவா உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, அவற்றுக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்.


திருகோணமலை மாவட்டத்திலுள்ள 21 உள்ளூராட்சி வட்டாரங்களுக்கான வேட்பாளர் நியமனங்களும் இதன்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. 


கட்சியின் எதிர்காலத் தேர்தல்கள் மற்றும் பிரதேச ரீதியான மக்கள் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



மாவட்ட ரீதியாக கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அமைப்பாளர்கள் வகிக்க வேண்டிய பங்கு குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.


இந்த முக்கிய நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அஷ்ரப் தாஹிர், கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் நியமனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மற்றும் வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் விசேட வைபவம் நேற்று (11) கிண்ணியாவில் நடைபெற்றுள்ளது.கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர் ஹில்மி முகைதீன்பாவா உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, அவற்றுக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்.திருகோணமலை மாவட்டத்திலுள்ள 21 உள்ளூராட்சி வட்டாரங்களுக்கான வேட்பாளர் நியமனங்களும் இதன்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. கட்சியின் எதிர்காலத் தேர்தல்கள் மற்றும் பிரதேச ரீதியான மக்கள் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ரீதியாக கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அமைப்பாளர்கள் வகிக்க வேண்டிய பங்கு குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.இந்த முக்கிய நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அஷ்ரப் தாஹிர், கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement