பாணந்துறைப் பகுதியிலுள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இவ்வாறு காணொளி எடுப்பதைப் பார்த்த ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை பொலிஸார் சோதனை செய்தபோது,
அவர் சிறிது காலமாகவே பெண்கள் கழிப்பறைக்குச் செல்லும் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம, நவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த அதே அலுவலகத்தில் பணியாற்றும் 26 வயதுடைய ஊழியர் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதோடு,
மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த ஊழியர்; அலுவலகத்தில் சிறிது காலமாக நடந்த சம்பவம் பாணந்துறைப் பகுதியிலுள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் இவ்வாறு காணொளி எடுப்பதைப் பார்த்த ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை பொலிஸார் சோதனை செய்தபோது,அவர் சிறிது காலமாகவே பெண்கள் கழிப்பறைக்குச் செல்லும் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம, நவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த அதே அலுவலகத்தில் பணியாற்றும் 26 வயதுடைய ஊழியர் என தெரிய வந்துள்ளது. சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.