சளித் தொல்லையை நீக்க, விக்ஸுடன் கற்பூரத்தை குழைத்து, மூக்கில் தேய்க்கப்பட்ட 8 மாத குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த தேநாதன் என்பவரின் 8 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு சளிப்பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
இதனால், கடந்த 13 ஆம் திகதி, தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால், சளிப்பிரச்சினை இல்லாமல் போய்விடும் என நினைத்து, இரண்டையும் சேர்த்துக் குழைத்து, குழந்தையின் மூக்கில் தேய்த்ததால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை இன்று உயிரிழந்தது.
சளிப் பிரச்சினையால் குழந்தை உயிரிழந்ததா அல்லது தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால் குழந்தை உயிரிழந்ததாத என பிரதே பரிசோதனையிலே வெளிவரும் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சளித் தொல்லையால் அவதிப்பட்ட 8 மாத குழந்தை; விக்ஸ் உடன் கற்பூரத்தை சேர்த்து தேய்த்ததால் நடந்த விபரீதம் சளித் தொல்லையை நீக்க, விக்ஸுடன் கற்பூரத்தை குழைத்து, மூக்கில் தேய்க்கப்பட்ட 8 மாத குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த தேநாதன் என்பவரின் 8 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு சளிப்பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்துள்ளது.இதனால், கடந்த 13 ஆம் திகதி, தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால், சளிப்பிரச்சினை இல்லாமல் போய்விடும் என நினைத்து, இரண்டையும் சேர்த்துக் குழைத்து, குழந்தையின் மூக்கில் தேய்த்ததால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை இன்று உயிரிழந்தது. சளிப் பிரச்சினையால் குழந்தை உயிரிழந்ததா அல்லது தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால் குழந்தை உயிரிழந்ததாத என பிரதே பரிசோதனையிலே வெளிவரும் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.