• Nov 28 2025

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து! பேருந்து, விமான சேவைகளும் பாதிப்பு

Chithra / Nov 28th 2025, 9:02 am
image

நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல ரயில் பாதைகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் மரங்கள் விழும் அபாயமும் அதிகரித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் நிலவும் இந்த அபாயகரமான சூழ்நிலைகள் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  கொழும்பு - கோட்டை, கண்டி மற்றும் பதுளைக்கு இடையில் இன்று காலை இயக்கப்படவிருந்த 12 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பேருந்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன. 

நாட்டின் அநேகமான பிரதான வீதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. மலையகத்தின் சில பகுதிகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. 

அத்தோடு சீரற்ற வானிலை காரணமாக விமான சேவைகளும் தாமதமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சில விமானங்கள் ஏனைய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அதன்படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாகியுள்ளன. 

பல விமானங்கள் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.


அனைத்து ரயில் சேவைகளும் இரத்து பேருந்து, விமான சேவைகளும் பாதிப்பு நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்தார்.தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல ரயில் பாதைகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் மரங்கள் விழும் அபாயமும் அதிகரித்துள்ளது.அதன்படி, நாடு முழுவதும் நிலவும் இந்த அபாயகரமான சூழ்நிலைகள் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில்  கொழும்பு - கோட்டை, கண்டி மற்றும் பதுளைக்கு இடையில் இன்று காலை இயக்கப்படவிருந்த 12 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பேருந்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன. நாட்டின் அநேகமான பிரதான வீதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. மலையகத்தின் சில பகுதிகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. அத்தோடு சீரற்ற வானிலை காரணமாக விமான சேவைகளும் தாமதமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில விமானங்கள் ஏனைய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாகியுள்ளன. பல விமானங்கள் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement