• May 18 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எம்முடன் இணையுங்கள்; அழைப்பு விடுத்த சஜித் தரப்பு!

Chithra / Sep 11th 2024, 7:50 am
image


ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கும் தயாராகியுள்ளார். 

கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியை பூஜ்ஜியமாக்கினார். 

அதேபோன்று தற்போது அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவருக்கே வாக்களிக்க இருந்ததாகவும் கூறியுள்ளார். 

ரணில் விக்ரமசிங்க இதன் மூலம் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டாம் என மறைமுகமாக கூறியுள்ளார்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு துரோகமிழைக்காத குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளது.

இதன்காரணமாக, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என  எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எம்முடன் இணையுங்கள்; அழைப்பு விடுத்த சஜித் தரப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கும் தயாராகியுள்ளார். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியை பூஜ்ஜியமாக்கினார். அதேபோன்று தற்போது அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவருக்கே வாக்களிக்க இருந்ததாகவும் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க இதன் மூலம் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டாம் என மறைமுகமாக கூறியுள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு துரோகமிழைக்காத குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளது.இதன்காரணமாக, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என  எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now