• Sep 02 2026

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் தேவை! அதாவுல்லா வலியுறுத்தல்

Aathira / Sep 2nd 2026, 11:05 am
image

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தைத் தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு இடமாற்றி, அதற்கான நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) நடைபெற்ற போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

 அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டடம் வேறொரு பொருத்தமான காணியில் அமைக்கப்பட வேண்டும். தற்போது பொலிஸ் நிலையம் இயங்கி வரும் காணியானது அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமானதாகும். அக் காணி ஆரம்பத்தில் வாடகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருந்தது.

அக்கரைப்பற்று நகரின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அரசாங்கத்தின் நிலங்கள் மற்றும் வளங்கள் முறைப்படி பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் அங்கு விரிவாக எடுத்துரைத்தார்.

எனவே, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் கட்டடப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த தரப்பினர் உடனடியாக முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா முன்வைத்த இக் காரசாரமான கருத்துக்கள் அடங்கிய காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் தேவை அதாவுல்லா வலியுறுத்தல் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தைத் தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு இடமாற்றி, அதற்கான நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா வலியுறுத்தினார்.அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) நடைபெற்ற போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.மேலும் அவர் கூறுகையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டடம் வேறொரு பொருத்தமான காணியில் அமைக்கப்பட வேண்டும். தற்போது பொலிஸ் நிலையம் இயங்கி வரும் காணியானது அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமானதாகும். அக் காணி ஆரம்பத்தில் வாடகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருந்தது.அக்கரைப்பற்று நகரின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அரசாங்கத்தின் நிலங்கள் மற்றும் வளங்கள் முறைப்படி பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் அங்கு விரிவாக எடுத்துரைத்தார்.எனவே, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் கட்டடப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த தரப்பினர் உடனடியாக முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா முன்வைத்த இக் காரசாரமான கருத்துக்கள் அடங்கிய காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement