• Apr 17 2026

அனுமதியின்றி கனடாவுக்கு பறந்த ஏர் இந்தியா விமானம்

Aathira / Mar 21st 2026, 9:04 am
image

டெல்லியில் இருந்து கனடாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா (AI185) போயிங் 777-200LR என்ற விமானம் அனுமதி இல்லாமல் புறப்பட்ட காரணத்தால், நடுவானில் இருந்து மீண்டும் புது டெல்லிக்குத் திரும்பியுள்ளது.

நேற்று காலை 11:34 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் சுமார் 4 மணி நேரம் பறந்தபின்பு, சீனா வான்பகுதியில் குன்மிங் அருகே  விமானம் அனுமதி இல்லாமல் பறந்து கொண்டிருப்பதை ஏர் இந்தியா அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதன்பின்பு, உடனடியாக விமானிக்கு தகவல் அனுப்பி, விமானத்தை டெல்லிக்கு மீண்டும் திருப்பியுள்ளனர்

இதனைத் தொடர்ந்து  பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் விமானம் டெல்லியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தின் மொத்த பயண நேரம் சுமார் 9 மணி நேரமாக இருந்துள்ளது.

இறுதியில்,  ஒரு தொழில்நுட்ப பிரச்சனை காரணமாகவே விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இந்த முடிவு வழக்கமான நடைமுறைகளுக்கு இணங்க எடுக்கப்பட்டதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும்,  பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது

அனுமதியின்றி கனடாவுக்கு பறந்த ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து கனடாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா (AI185) போயிங் 777-200LR என்ற விமானம் அனுமதி இல்லாமல் புறப்பட்ட காரணத்தால், நடுவானில் இருந்து மீண்டும் புது டெல்லிக்குத் திரும்பியுள்ளது.நேற்று காலை 11:34 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் சுமார் 4 மணி நேரம் பறந்தபின்பு, சீனா வான்பகுதியில் குன்மிங் அருகே  விமானம் அனுமதி இல்லாமல் பறந்து கொண்டிருப்பதை ஏர் இந்தியா அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.அதன்பின்பு, உடனடியாக விமானிக்கு தகவல் அனுப்பி, விமானத்தை டெல்லிக்கு மீண்டும் திருப்பியுள்ளனர்இதனைத் தொடர்ந்து  பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் விமானம் டெல்லியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.குறித்த விமானத்தின் மொத்த பயண நேரம் சுமார் 9 மணி நேரமாக இருந்துள்ளது.இறுதியில்,  ஒரு தொழில்நுட்ப பிரச்சனை காரணமாகவே விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இந்த முடிவு வழக்கமான நடைமுறைகளுக்கு இணங்க எடுக்கப்பட்டதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.மேலும்,  பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது

Advertisement

Advertisement

Advertisement