மத்திய கிழக்குக்கு அப்பாலும் தனது இராணுவ சக்தியை வெளிப்படுத்தும் முயற்சியாக, இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் தளத்தின் மீது ஈரான் இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிகாரிகளின் வெளியிட்ட தகவலின்படி, ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று பறக்கும் போதே செயலிழந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு ஏவுகணையை தடுக்க அமெரிக்கப் போர்க்கப்பல் SM-3 இடைமறிப்பு ஏவுகணையை பயன்படுத்தியதாகவும், ஆனால் அது வெற்றியடைந்ததா என்பது இன்னும் உறுதியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டியாகோ கார்சியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பயன்படுத்தும் முக்கிய இராணுவ தளமாகும்.
இங்கு நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணை கப்பல்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், அந்த இடத்தில் ஈரான் தனது ஏவுகணையை செலுத்தியதாக வெளியான தகவல், சர்வதேச அளவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
டியாகோ கார்சியாவை குறிவைத்த ஈரான்; சர்வதேச அளவில் அதிகரித்த பதற்றம் மத்திய கிழக்குக்கு அப்பாலும் தனது இராணுவ சக்தியை வெளிப்படுத்தும் முயற்சியாக, இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் தளத்தின் மீது ஈரான் இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க அதிகாரிகளின் வெளியிட்ட தகவலின்படி, ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று பறக்கும் போதே செயலிழந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு ஏவுகணையை தடுக்க அமெரிக்கப் போர்க்கப்பல் SM-3 இடைமறிப்பு ஏவுகணையை பயன்படுத்தியதாகவும், ஆனால் அது வெற்றியடைந்ததா என்பது இன்னும் உறுதியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டியாகோ கார்சியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பயன்படுத்தும் முக்கிய இராணுவ தளமாகும். இங்கு நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணை கப்பல்கள் காணப்படுகின்றன.இவ்வாறான நிலையில், அந்த இடத்தில் ஈரான் தனது ஏவுகணையை செலுத்தியதாக வெளியான தகவல், சர்வதேச அளவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.