• May 15 2025

நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம்: பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய முயற்சி

Chithra / May 15th 2025, 11:12 am
image


இலங்கையில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட GPS மற்றும் CCTV கண்காணிப்பு அமைப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், 

இந்த AI அமைப்புகள் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகளில் நிறுவப்படும் என்றும், இது ஓட்டுநர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உதவும் என்றும் கூறினார்.

இதன்படி ஓட்டுநர்கள் சோர்வாக இருக்கிறார்களா, தூக்கமாக இருக்கிறார்களா அல்லது கைபேசி பயன்படுத்துகிறார்களா என்பதை இந்த அமைப்புகள் மூலம் கண்காணிக்க முடியும். 

வெளிநாடுகளில் இது போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

மேலும், இந்த AI தொழில்நுட்பம் லொறிகள் ,கண்டெய்னர்கள் மற்றும் ரயில்களில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அனைத்து நீண்ட தூர பேருந்துகளும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம்: பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய முயற்சி இலங்கையில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட GPS மற்றும் CCTV கண்காணிப்பு அமைப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த AI அமைப்புகள் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகளில் நிறுவப்படும் என்றும், இது ஓட்டுநர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உதவும் என்றும் கூறினார்.இதன்படி ஓட்டுநர்கள் சோர்வாக இருக்கிறார்களா, தூக்கமாக இருக்கிறார்களா அல்லது கைபேசி பயன்படுத்துகிறார்களா என்பதை இந்த அமைப்புகள் மூலம் கண்காணிக்க முடியும். வெளிநாடுகளில் இது போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.மேலும், இந்த AI தொழில்நுட்பம் லொறிகள் ,கண்டெய்னர்கள் மற்றும் ரயில்களில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அனைத்து நீண்ட தூர பேருந்துகளும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement