• Jul 08 2026

நெல் கொள்வனவு தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இணக்கம்

Chithra / Jul 8th 2026, 12:47 pm
image


அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட விலையில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 


ஒரு கிலோ நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா 130 ரூபாவிற்கும் மற்றும் கீரி சம்பா 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யும்போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்தால், சந்தையில் அரிசியின் விலையைக் குறைப்பதற்கும் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


எவ்வாறாயினும், ஈரப்பதம் 14%க்கு மேற்படாத நாடு நெல்லுக்கு மட்டுமே 120 ரூபா விலையை வழங்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்.


அரிசி ஆலை உரிமையாளர்களினால் முன்வைக்கப்பட்ட கடன் நிவாரணம் உள்ளிட்ட சில யோசனைகளை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் பின்தொடர் கூட்டமொன்றில் மீளாய்வு செய்து, அரசாங்கத்தின் தேவையான ஒத்துழைப்பை வழங்கி, இந்தக் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நெல் கொள்வனவு தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இணக்கம் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட விலையில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஒரு கிலோ நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா 130 ரூபாவிற்கும் மற்றும் கீரி சம்பா 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யும்போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்தால், சந்தையில் அரிசியின் விலையைக் குறைப்பதற்கும் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், ஈரப்பதம் 14%க்கு மேற்படாத நாடு நெல்லுக்கு மட்டுமே 120 ரூபா விலையை வழங்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்.அரிசி ஆலை உரிமையாளர்களினால் முன்வைக்கப்பட்ட கடன் நிவாரணம் உள்ளிட்ட சில யோசனைகளை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் பின்தொடர் கூட்டமொன்றில் மீளாய்வு செய்து, அரசாங்கத்தின் தேவையான ஒத்துழைப்பை வழங்கி, இந்தக் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement