• Aug 06 2026

அம்பாறையில் அதிரடி சோதனை... ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

Aathira / Aug 5th 2026, 10:22 am
image

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிராந்திய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, அம்பாறை பிராந்திய பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து தலா 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான நபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 14,700 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் அம்பாகஹவெல்ல, ஜெமுனுபுர மற்றும் பொல்வக காலனி பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்ஹினியாகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறையில் அதிரடி சோதனை. ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை பிராந்திய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, அம்பாறை பிராந்திய பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து தலா 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், அவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான நபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 14,700 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் அம்பாகஹவெல்ல, ஜெமுனுபுர மற்றும் பொல்வக காலனி பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்ஹினியாகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement