அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதற்கட்டப் பயனாளிகள் பட்டியலில் தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை இதனை அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்தவர்களிடமிருந்து மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நாளை (11) நிறைவடையவிருந்தது.
எனினும், பிரதேச செயலகங்கள் ஊடாகப் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு, இந்தக் கால அவகாசத்தை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று முதல் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இணையவழி முறைமை ஊடாக மட்டுமே முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி வரை இணையவழி ஊடாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க முடியும்.
இதேவேளை, இதுவரை அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்தவர்களிடமிருந்து 105,233 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும், ஒரு விண்ணப்பதாரர் மற்றொரு விண்ணப்பதாரருக்கு எதிராக 1,220 ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பட்டியலில் பெயர் இல்லையா - புதிய இறுதித் திகதி அறிவிப்பு அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதற்கட்டப் பயனாளிகள் பட்டியலில் தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.நலன்புரி நன்மைகள் சபை இதனை அறிவித்துள்ளது.அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்தவர்களிடமிருந்து மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நாளை (11) நிறைவடையவிருந்தது.எனினும், பிரதேச செயலகங்கள் ஊடாகப் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு, இந்தக் கால அவகாசத்தை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அத்துடன், இன்று முதல் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இணையவழி முறைமை ஊடாக மட்டுமே முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி வரை இணையவழி ஊடாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க முடியும்.இதேவேளை, இதுவரை அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்தவர்களிடமிருந்து 105,233 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும், ஒரு விண்ணப்பதாரர் மற்றொரு விண்ணப்பதாரருக்கு எதிராக 1,220 ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.