மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தி, அதில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “Certificate in Tourism Operations” எனும் ஒருநாள் செயலமர்வு இன்று (11.11.2026) மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் அனுசரணையுடன், மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றம் இணைந்து இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.
தலைமன்னார் மணல் திட்டுக்கான படகுச் சேவை, வங்காலை பறவைகள் சரணாலயம், மடு வனாந்தர சபாரி உள்ளிட்ட சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாடுகளை மையப்படுத்தி மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, எதிர்காலத்தில் இத்துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சுற்றுலாத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் இச்செயலமர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
50 இளைஞர்கள் மாத்திரம் பங்கேற்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட இந்தச் செயலமர்வு, மன்னார் மாவட்ட இளைஞர்களுக்கு சுற்றுலாத்துறையில் புதியதொரு பாதையைத் திறந்துவைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
மன்னார் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றதுமன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தி, அதில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “Certificate in Tourism Operations” எனும் ஒருநாள் செயலமர்வு இன்று (11.11.2026) மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் அனுசரணையுடன், மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றம் இணைந்து இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.தலைமன்னார் மணல் திட்டுக்கான படகுச் சேவை, வங்காலை பறவைகள் சரணாலயம், மடு வனாந்தர சபாரி உள்ளிட்ட சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாடுகளை மையப்படுத்தி மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.சுற்றுலாத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, எதிர்காலத்தில் இத்துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சுற்றுலாத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் இச்செயலமர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.50 இளைஞர்கள் மாத்திரம் பங்கேற்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட இந்தச் செயலமர்வு, மன்னார் மாவட்ட இளைஞர்களுக்கு சுற்றுலாத்துறையில் புதியதொரு பாதையைத் திறந்துவைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.