• Jul 04 2025

மட்டக்களப்பில் டிப்பருடன் எதிரே வந்த லொறி மோதி விபத்து: ஒருவர் காயம்

Chithra / Jul 3rd 2025, 3:13 pm
image


மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து இன்று வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து வந்த லொறி, எதிரே வந்த டிப்பருடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் லொறி சாரதி காயமடைந்து உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குப் பின்னர், டிப்பரை ஓட்டிச் சென்ற சாரதி இடத்தைவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பில் டிப்பருடன் எதிரே வந்த லொறி மோதி விபத்து: ஒருவர் காயம் மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இவ் விபத்து இன்று வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து வந்த லொறி, எதிரே வந்த டிப்பருடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் லொறி சாரதி காயமடைந்து உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்துக்குப் பின்னர், டிப்பரை ஓட்டிச் சென்ற சாரதி இடத்தைவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement