• Dec 02 2024

ஓட்டமாவடியில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே பறிபோன குடும்பஸ்தரின் உயிர்

Chithra / Nov 10th 2024, 3:43 pm
image


 

ஓட்டமாவடி, மியாங்குளம் - கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி அக்பர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய முகம்மது இஸ்மயில் பாறுக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தான் முகாமையாளராக பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடமைக்குச் செல்லும் போதே விபத்துக்குள்ளாகி   உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குறித்த நபர் மீது, எதிரே வந்த சிறிய லொறி மோதியதில் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின்  உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


ஓட்டமாவடியில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே பறிபோன குடும்பஸ்தரின் உயிர்  ஓட்டமாவடி, மியாங்குளம் - கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.ஓட்டமாவடி அக்பர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய முகம்மது இஸ்மயில் பாறுக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் தான் முகாமையாளராக பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடமைக்குச் செல்லும் போதே விபத்துக்குள்ளாகி   உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குறித்த நபர் மீது, எதிரே வந்த சிறிய லொறி மோதியதில் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின்  உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement