• Apr 17 2026

மும்பையில் கைதான பொடி லெசி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

Chithra / Feb 27th 2026, 7:37 am
image


இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 


மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டர். 


நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். 


பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார். 


இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். 


இவரது கைது குறித்து இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் இலங்கை பாதுகாப்புத் துறையினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விரைவாக இலங்கைக்கு நாடு கடத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.


அதன்படி, நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் அவரை அழைத்துவர இந்தியாவுக்குச் சென்றதுடன், அவர் இன்று அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்பட்டார்.


இவருக்கு எதிராக நிலுவையிலுள்ள பல குற்றச்சாட்டுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


மும்பையில் கைதான பொடி லெசி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டர். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரது கைது குறித்து இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் இலங்கை பாதுகாப்புத் துறையினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விரைவாக இலங்கைக்கு நாடு கடத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.அதன்படி, நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் அவரை அழைத்துவர இந்தியாவுக்குச் சென்றதுடன், அவர் இன்று அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்பட்டார்.இவருக்கு எதிராக நிலுவையிலுள்ள பல குற்றச்சாட்டுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement