யாழ்ப்பாணத்தில் 24 வயதுடைய இளைஞன் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த மாதம் 30ஆம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மலேரியாக் காய்ச்சல் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.
தெல்லிப்பழையைச் சேர்ந்த குறித்த இளைஞன் 6 மாதங்களாக நைஜீரியா கப்பல் ஒன்றில் வேலை செய்துள்ள நிலையில் கடந்த 28 ஆம் திகதி அன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணத்தில் 24 வயதுடைய இளைஞன் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.குறித்த இளைஞன் கடந்த மாதம் 30ஆம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் அவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மலேரியாக் காய்ச்சல் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.தெல்லிப்பழையைச் சேர்ந்த குறித்த இளைஞன் 6 மாதங்களாக நைஜீரியா கப்பல் ஒன்றில் வேலை செய்துள்ள நிலையில் கடந்த 28 ஆம் திகதி அன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.