தென்னோலையில் நவீன மற்றும் பாரம்பரிய முறையில் உற்பத்திப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை ஒன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரி வழாகத்தில் புதன் மற்றும் வியாழன் (ஏப்ரல் 22,23)ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றன.
இதன்போது தென்னை ஓலையில் கைவினைப் பொருட்களையும், அலங்கார வடிவமைப்புகளையும், சூழல் நேய உற்பத்திப் பொருட்களும் எவ்வாறு உற்பத்தி செய்வது என பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த மில்லர் பௌண்டேஷன் அமைப்பின் சிறப்பு பயிற்றுப்பிப்பாளர் முத்து என்பவர் இதன்போது கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வைத்தார்.
இப்பயிற்சிப் பட்டறையில் தெரிவு 82 பேர் கலந்து கொண்டிருந்தனர். பயிற்சிப் பட்டறையின் நிகழ்வில் பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன
இதில் குறிப்பாக பெண்கள் வலை அமைப்பான மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அதிகார சபையில் கைவினை உற்பத்திகளில் ஈடுபடும் பெண்கள், இயற்கையான வடிவமைப்புகளை செய்து கொண்டிருக்கும் ஆண்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இவ்வாறான கைப்பணித் தொழிலில் ஈடுபடும் ஆண்கள், பல்கலைக் கழக மாணவர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
அம்மன் பௌண்டேஷன் அமைப்பின் நிதி உதவியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் பு.பிரணவன்;, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலாந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கென்னடி, அம்மன் பௌண்டேஷ அமைப்பின் பணிப்பாளர் வாமதேவன் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருணாளினி, மாவட்ட பெண்கள் அதிகாரசபை தலைவி சாரதாதேவி, மாவட்ட பெண்கள் அதிகாரசபை வியாபார இணைப்பாளர் திருமதி வசந்தராசா சர்மிளா உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
தென்னோலையில் உற்பத்திப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை தென்னோலையில் நவீன மற்றும் பாரம்பரிய முறையில் உற்பத்திப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை ஒன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரி வழாகத்தில் புதன் மற்றும் வியாழன் (ஏப்ரல் 22,23)ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றன.இதன்போது தென்னை ஓலையில் கைவினைப் பொருட்களையும், அலங்கார வடிவமைப்புகளையும், சூழல் நேய உற்பத்திப் பொருட்களும் எவ்வாறு உற்பத்தி செய்வது என பயிற்சிகள் வழங்கப்பட்டன.இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த மில்லர் பௌண்டேஷன் அமைப்பின் சிறப்பு பயிற்றுப்பிப்பாளர் முத்து என்பவர் இதன்போது கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வைத்தார். இப்பயிற்சிப் பட்டறையில் தெரிவு 82 பேர் கலந்து கொண்டிருந்தனர். பயிற்சிப் பட்டறையின் நிகழ்வில் பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டனஇதில் குறிப்பாக பெண்கள் வலை அமைப்பான மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அதிகார சபையில் கைவினை உற்பத்திகளில் ஈடுபடும் பெண்கள், இயற்கையான வடிவமைப்புகளை செய்து கொண்டிருக்கும் ஆண்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இவ்வாறான கைப்பணித் தொழிலில் ஈடுபடும் ஆண்கள், பல்கலைக் கழக மாணவர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.அம்மன் பௌண்டேஷன் அமைப்பின் நிதி உதவியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் பு.பிரணவன்;, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலாந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கென்னடி, அம்மன் பௌண்டேஷ அமைப்பின் பணிப்பாளர் வாமதேவன் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருணாளினி, மாவட்ட பெண்கள் அதிகாரசபை தலைவி சாரதாதேவி, மாவட்ட பெண்கள் அதிகாரசபை வியாபார இணைப்பாளர் திருமதி வசந்தராசா சர்மிளா உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.