• Apr 17 2026

திருகோணமலையில் கடலரிப்பால் தாழிறங்கிய கோயில்! எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை

Chithra / Feb 14th 2026, 3:08 pm
image

திருகோணமலை - பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டணத்தெரு பகுதியில் கடலரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்ட  பிள்ளையார் கோயில் ஒன்றும் கடலுக்கடியில் தாழிறங்கியுள்ளது.


அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பகுதி கடலரிப்பினை எதிர்நோக்கியிருந்ததுடன் மீனவக் குடும்பங்களும் இதனால் கடலுக்கு செல்ல முடியாது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டனர். 


இந்த நிலையில் கரையோர பகுதி மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 


குறித்த கரையோர பகுதியை சீரமைக்கும் பணி இன்று (14) திருகோணமலை மாநகர சபை, பட்டினத்தெரு மீனவர்கள், இளைஞர்கள் இணைந்து கடலரிப்பில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.


 இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் கந்தசாமி செல்வராசா ஆகியோர் களத்துக்கு சென்று புனரமைப்பு பணிகளை அவதானித்ததுடன்,  புனரமைப்பு பணிகளை முழுமையாக பூர்த்தி செய்து தருவதாகவும் அப்பகுதி மீனவர்களிடத்தில் தெரிவித்தனர். 

திருகோணமலையில் கடலரிப்பால் தாழிறங்கிய கோயில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை திருகோணமலை - பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டணத்தெரு பகுதியில் கடலரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்ட  பிள்ளையார் கோயில் ஒன்றும் கடலுக்கடியில் தாழிறங்கியுள்ளது.அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பகுதி கடலரிப்பினை எதிர்நோக்கியிருந்ததுடன் மீனவக் குடும்பங்களும் இதனால் கடலுக்கு செல்ல முடியாது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டனர். இந்த நிலையில் கரையோர பகுதி மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. குறித்த கரையோர பகுதியை சீரமைக்கும் பணி இன்று (14) திருகோணமலை மாநகர சபை, பட்டினத்தெரு மீனவர்கள், இளைஞர்கள் இணைந்து கடலரிப்பில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் கந்தசாமி செல்வராசா ஆகியோர் களத்துக்கு சென்று புனரமைப்பு பணிகளை அவதானித்ததுடன்,  புனரமைப்பு பணிகளை முழுமையாக பூர்த்தி செய்து தருவதாகவும் அப்பகுதி மீனவர்களிடத்தில் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement