• Apr 17 2026

களுவாஞ்சிக்குடியில் ரட்டம எக்கட ' தேசிய செயற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்வு !

Ziya / Mar 5th 2026, 4:18 pm
image

'ரட்டம எக்கட ' தேசிய செயற்பாட்டின் விஷ போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுத்த நிகழ்வு இன்றைய தினம் ( 05 ) களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நடைபெற்றது.


இதன் போது துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை,பஸ்தரிப்பு நிலையம் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு பின்னாலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. 


இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் களுவாஞ்சிகுடி, நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலய உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

களுவாஞ்சிக்குடியில் ரட்டம எக்கட ' தேசிய செயற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்வு 'ரட்டம எக்கட ' தேசிய செயற்பாட்டின் விஷ போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுத்த நிகழ்வு இன்றைய தினம் ( 05 ) களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நடைபெற்றது.இதன் போது துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை,பஸ்தரிப்பு நிலையம் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு பின்னாலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் களுவாஞ்சிகுடி, நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலய உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement