மனித ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05)இடம் பெற்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய மனித ஆட்கடத்தல் தொடர்பிலான பணிக் குழுவின் ஏற்பாட்டிலும் திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையிலும் இடம் பெற்றது.
மனித ஆட்கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் நோக்கில் குறித்த பணிக்குழு ஊடாக பல்வேறு விழிப்புணர்வுகள் இடம் பெற்றன.
சர்வதேச புலம்பெயர்தலுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் நிகழ் நிலை ஊடாக இணைந்து மனித ஆட்கடத்தல் தொடர்பாக தெளிவூட்டினர்.
மனித ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்திட்டம் ஊடாக குறித்த நிகழ்வு இடம் பெற்று வருகிறது.
வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக புலம்பெயர்தலின் போது சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக பதிவு செய்து செல்லுதல்,ஏமாற்று நடவடிக்கைகளில் இருந்து பணிப் பெண்களை பாதுகாத்துக் கொள்ளல் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது.
மனித வியாபாரமானது பல்வேறு வடிவங்களில் இடம் பெற்று வருகிறதூ இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதனை பிரதேச மட்டத்துக்கு கொண்டு செல்லுதல் தொடர்பிலும் பேசப்பட்டது.
மேலும் இணைய வழி மோசடி ஊடாகவும் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் இவ்வாறான ஏமாற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதில் பாராளுமன்ற விவகார அமைச்சின் மேலதிக செயலாளரும்,தேசிய மனித ஆட்கடத்தல் எதிர்ப்பு பணி குழுவின் செயலாளருமான சட்டத்தரணி எச்.எச்.என்.பிரியங்கணி ஹேவாரத்ண , பணிக் குழுவின் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கான மனித ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மனித ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05)இடம் பெற்றது.வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய மனித ஆட்கடத்தல் தொடர்பிலான பணிக் குழுவின் ஏற்பாட்டிலும் திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையிலும் இடம் பெற்றது.மனித ஆட்கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் நோக்கில் குறித்த பணிக்குழு ஊடாக பல்வேறு விழிப்புணர்வுகள் இடம் பெற்றன. சர்வதேச புலம்பெயர்தலுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் நிகழ் நிலை ஊடாக இணைந்து மனித ஆட்கடத்தல் தொடர்பாக தெளிவூட்டினர்.மனித ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்திட்டம் ஊடாக குறித்த நிகழ்வு இடம் பெற்று வருகிறது. வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக புலம்பெயர்தலின் போது சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக பதிவு செய்து செல்லுதல்,ஏமாற்று நடவடிக்கைகளில் இருந்து பணிப் பெண்களை பாதுகாத்துக் கொள்ளல் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது.மனித வியாபாரமானது பல்வேறு வடிவங்களில் இடம் பெற்று வருகிறதூ இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதனை பிரதேச மட்டத்துக்கு கொண்டு செல்லுதல் தொடர்பிலும் பேசப்பட்டது.மேலும் இணைய வழி மோசடி ஊடாகவும் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் இவ்வாறான ஏமாற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.இதில் பாராளுமன்ற விவகார அமைச்சின் மேலதிக செயலாளரும்,தேசிய மனித ஆட்கடத்தல் எதிர்ப்பு பணி குழுவின் செயலாளருமான சட்டத்தரணி எச்.எச்.என்.பிரியங்கணி ஹேவாரத்ண , பணிக் குழுவின் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.