• Oct 28 2026

மொனராகலையில் சோகமாக முடிந்த பயணம் – ஒருவர் பலியான பரிதாபம்!

Chithra / Oct 28th 2026, 11:50 am
image


மொனராகலையில் இன்று (28) காலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மொனராகலை – வெதிகும்புர வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதியுள்ளது.


இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சுமார் எட்டு வயது சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் சோகமான விடயம் என்னவென்றால், அலியாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.


விபத்து தொடர்பில் மொனராகலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மொனராகலையில் சோகமாக முடிந்த பயணம் – ஒருவர் பலியான பரிதாபம் மொனராகலையில் இன்று (28) காலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மொனராகலை – வெதிகும்புர வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதியுள்ளது.இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சுமார் எட்டு வயது சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சோகமான விடயம் என்னவென்றால், அலியாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் மொனராகலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement