• Apr 17 2026

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

Chithra / Mar 16th 2026, 2:38 pm
image



பதுளை - ஊவா பரணகம, யாழகமுவ பகுதியில் இன்று காலை கட்டுத் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் ஊவா பரணகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள்  என பொலிஸார் தெரிவித்தனர்.


ஊவா பரணகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் குழுவினர் யாழகமுவ வனப்பகுதிக்கு சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொள்வதற்காக சென்ற வேளையில்,

மிருகங்களை வேட்டையாட கட்டப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் குறித்த கான்ஸ்டபிள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவத்தால் கான்ஸ்டபிளின் இடது காலின் முழங்காலில் காயமேற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக வெலிமடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் பதுளை - ஊவா பரணகம, யாழகமுவ பகுதியில் இன்று காலை கட்டுத் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் ஊவா பரணகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள்  என பொலிஸார் தெரிவித்தனர்.ஊவா பரணகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் குழுவினர் யாழகமுவ வனப்பகுதிக்கு சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொள்வதற்காக சென்ற வேளையில்,மிருகங்களை வேட்டையாட கட்டப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் குறித்த கான்ஸ்டபிள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தால் கான்ஸ்டபிளின் இடது காலின் முழங்காலில் காயமேற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக வெலிமடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement