• May 25 2026

ரயிலில் மலசலகூடம் அருகே சிற்றுண்டி தயார் செய்த நபர்; சுகாதார நடைமுறையை மீறிய செயல் வைராலகும் அருவருப்புக் காட்சி!

shanu / Oct 23rd 2025, 10:55 am
image

ஓடும் ரயிலில் சிற்றுண்டி விற்பனை செய்யும் நபர் ஒருவரின் அருவருக்கத்தக்க செயல் தற்போது  சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்படைய வைத்துள்ளது. 


ரயிலில் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் ஓடும் ரயிலில் சிற்றுண்டிகளை விற்பனை செய்வதற்காக அதனைத் தயார் செய்துள்ளார். 


ரயிலில் மலசலகூடம் அருகே வைத்து உணவுகளைத் தயார் செய்துள்ளார். ஒரு கூடையில் உணவுகளை வைப்பதற்காக அதனை நிலத்தில் வைத்துள்ளார். 


பின்னர் நிலத்தில் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்து தனது கையால் துடைத்துவிட்டு கூடையில் இருந்த மற்ற உணவுகளுடன் வைத்துள்ளார். 


கையில் எந்தவொரு அணியுறையும் இல்லாது சுகாதார நடைமுறையின்றி உணவுகளை எடுத்துள்ளார். 


அதுமட்டுமன்றி அருகில் மலசலகூடம் உள்ளது. அதிலிருந்து வெளிவரும் மாசற்ற காற்று உள்ளிட்டைவையும் உணவுகளில் தாக்கம் செலுத்துவதாகக் காணப்படுகின்றது. 


இவ்வாறு எந்தவொரு சுகாதார நடைமுறையையும் பின்பற்றாது சிற்றுண்டிகளை குறித்த விற்பனையாளர் தயார் செய்த காட்சி அனைவரையும் அருவருக்க வைத்துள்ளது. 


குறித்த விற்பனையாளர் சிற்றுண்டிகளை தயார் செய்த காட்சியையும் அங்கிருந்த நபரொருவர் காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 


அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் ரயிலில் உணவுகளை உண்ணக்கூடாது என்றும் சிலர் இனி ரயிலில் பயணம் செய்யக் கூடாது என்ற அளவில் அந்த நபரின் செயல் அருவருக்க வைத்துள்ளது. 


இது தொடர்பில் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயிலில் மலசலகூடம் அருகே சிற்றுண்டி தயார் செய்த நபர்; சுகாதார நடைமுறையை மீறிய செயல் வைராலகும் அருவருப்புக் காட்சி ஓடும் ரயிலில் சிற்றுண்டி விற்பனை செய்யும் நபர் ஒருவரின் அருவருக்கத்தக்க செயல் தற்போது  சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்படைய வைத்துள்ளது. ரயிலில் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் ஓடும் ரயிலில் சிற்றுண்டிகளை விற்பனை செய்வதற்காக அதனைத் தயார் செய்துள்ளார். ரயிலில் மலசலகூடம் அருகே வைத்து உணவுகளைத் தயார் செய்துள்ளார். ஒரு கூடையில் உணவுகளை வைப்பதற்காக அதனை நிலத்தில் வைத்துள்ளார். பின்னர் நிலத்தில் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்து தனது கையால் துடைத்துவிட்டு கூடையில் இருந்த மற்ற உணவுகளுடன் வைத்துள்ளார். கையில் எந்தவொரு அணியுறையும் இல்லாது சுகாதார நடைமுறையின்றி உணவுகளை எடுத்துள்ளார். அதுமட்டுமன்றி அருகில் மலசலகூடம் உள்ளது. அதிலிருந்து வெளிவரும் மாசற்ற காற்று உள்ளிட்டைவையும் உணவுகளில் தாக்கம் செலுத்துவதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு எந்தவொரு சுகாதார நடைமுறையையும் பின்பற்றாது சிற்றுண்டிகளை குறித்த விற்பனையாளர் தயார் செய்த காட்சி அனைவரையும் அருவருக்க வைத்துள்ளது. குறித்த விற்பனையாளர் சிற்றுண்டிகளை தயார் செய்த காட்சியையும் அங்கிருந்த நபரொருவர் காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் ரயிலில் உணவுகளை உண்ணக்கூடாது என்றும் சிலர் இனி ரயிலில் பயணம் செய்யக் கூடாது என்ற அளவில் அந்த நபரின் செயல் அருவருக்க வைத்துள்ளது. இது தொடர்பில் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement