தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கமான சார்க் அமைப்புக்கு எதிராக புதிய பிராந்திய அமைப்புக்கான திட்டம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளே புதிய பிராந்திய அமைப்புக்கான திட்டத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சார்க் என்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்கு மாறான அமைப்பாக செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த நிலையில் இந்த மாற்று அமைப்பு தொடர்பில் ஆராயும் முகமாக சீனாவின் குன்மிங் என்ற இடத்தில், கடந்த 19ஆம் திகதியன்று பாகிஸ்தான், சீனா மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது இந்தியா உட்பட்ட ஏனைய சார்க் அமைப்பு நாடுகளையும் தமது அமைப்பில் இணைவதற்கான அழைப்பை விடுப்பது என்று குறித்த நாடுகள் தீர்மானித்துள்ளன.
எனினும் மூன்று நாடுகளுக்கிடையேயான இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல என்று பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சார்க் அமைப்புக்கு எதிராக உருவாகும் புதிய பிராந்திய அமைப்பு தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கமான சார்க் அமைப்புக்கு எதிராக புதிய பிராந்திய அமைப்புக்கான திட்டம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளே புதிய பிராந்திய அமைப்புக்கான திட்டத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சார்க் என்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்கு மாறான அமைப்பாக செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில் இந்த மாற்று அமைப்பு தொடர்பில் ஆராயும் முகமாக சீனாவின் குன்மிங் என்ற இடத்தில், கடந்த 19ஆம் திகதியன்று பாகிஸ்தான், சீனா மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இதன்போது இந்தியா உட்பட்ட ஏனைய சார்க் அமைப்பு நாடுகளையும் தமது அமைப்பில் இணைவதற்கான அழைப்பை விடுப்பது என்று குறித்த நாடுகள் தீர்மானித்துள்ளன. எனினும் மூன்று நாடுகளுக்கிடையேயான இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல என்று பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.