பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உலப்பனே சுமங்கல தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விஹாரமஹா தேவி பூங்காவிலுள்ள புத்தர் சிலைக்கு அருகிலுள்ள வளாகம் மற்றும் நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, கன்னங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் ப்ளவர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும், விஹாரமஹா தேவி பூங்காவின் புத்தர் சிலையைச் சுற்றியுள்ள பகுதியிலும் தொடர்ந்து தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கோ தனியார் சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 106(1)ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் 106(3)ஆம் பிரிவுக்கு அமைய, குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்படுவது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 185ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு - விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குமார் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் நேற்று அமையின்மை ஏற்பட்டது. இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவிப்பதற்கு ஸ்தலத்துக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அமையின்மை ஏற்பட்டது.
ஞானசார தேரருக்காகப் போராடும் பிக்குகளுக்கு வந்த சிக்கல் - நீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உலப்பனே சுமங்கல தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, விஹாரமஹா தேவி பூங்காவிலுள்ள புத்தர் சிலைக்கு அருகிலுள்ள வளாகம் மற்றும் நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, கன்னங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் ப்ளவர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும், விஹாரமஹா தேவி பூங்காவின் புத்தர் சிலையைச் சுற்றியுள்ள பகுதியிலும் தொடர்ந்து தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கோ தனியார் சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 106(1)ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் 106(3)ஆம் பிரிவுக்கு அமைய, குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்படுவது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 185ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் கொழும்பு - விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குமார் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் நேற்று அமையின்மை ஏற்பட்டது. இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவிப்பதற்கு ஸ்தலத்துக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அமையின்மை ஏற்பட்டது.