இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, இன்றைய தினம் கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் திறந்துவைக்கப்பட்டது.
தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்தார்.
இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றலுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து நாடா வெட்டி திறந்துவைத்தனர்.
இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட புலம்பெயர் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டருந்தனர்.
இது குறித்து கனேடிய நீதித்துறை அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தனது முகநூல் பதிவில் குறிப்பிடுகையில்,
பிராம்ப்டனில் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்படுவது நமது கூட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.
இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களுக்கு இந்த நினைவுச்சின்னம் ஒரு நினைவாக நிற்கிறது.
உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களின் வலிமை மற்றும் மீள்தன்மையையும் இது மதிக்கிறது, அவர்களின் அர்ப்பணிப்பு வாதங்கள் நம்மை இந்த தருணத்திற்கு கொண்டு வந்துள்ளன.
கனடிய தமிழர்களின் தேசிய கவுன்சில் - NCCT, பிராம்ப்டன் தமிழ் சங்கம் - கனடா, மேயர் பேட்ரிக் பிரவுன் மற்றும் எங்கள் வரலாறு ஒருபோதும் மறக்கப்படாமல் இருக்க போராடிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தக் கொடுமைகளுக்கு நீதி கிடைக்க நாம் தொடர்ந்து அழைப்பு விடுக்கையில், நாம் வலுவாக நிற்போம், ஒன்றாக நிற்போம். எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் திறக்கப்பட்டது தமிழின அழிப்பு நினைவகம்; நீதி கிடைக்கும் வரை வலுவாக நிற்போம் என நீதித்துறை அமைச்சர் ஹரி உறுதி இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, இன்றைய தினம் கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் திறந்துவைக்கப்பட்டது. தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்தார். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றலுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.அதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து நாடா வெட்டி திறந்துவைத்தனர். இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட புலம்பெயர் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டருந்தனர். இது குறித்து கனேடிய நீதித்துறை அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தனது முகநூல் பதிவில் குறிப்பிடுகையில்,பிராம்ப்டனில் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்படுவது நமது கூட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களுக்கு இந்த நினைவுச்சின்னம் ஒரு நினைவாக நிற்கிறது.உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களின் வலிமை மற்றும் மீள்தன்மையையும் இது மதிக்கிறது, அவர்களின் அர்ப்பணிப்பு வாதங்கள் நம்மை இந்த தருணத்திற்கு கொண்டு வந்துள்ளன.கனடிய தமிழர்களின் தேசிய கவுன்சில் - NCCT, பிராம்ப்டன் தமிழ் சங்கம் - கனடா, மேயர் பேட்ரிக் பிரவுன் மற்றும் எங்கள் வரலாறு ஒருபோதும் மறக்கப்படாமல் இருக்க போராடிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.இந்தக் கொடுமைகளுக்கு நீதி கிடைக்க நாம் தொடர்ந்து அழைப்பு விடுக்கையில், நாம் வலுவாக நிற்போம், ஒன்றாக நிற்போம். எனக் குறிப்பிட்டுள்ளார்.