ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று, பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் பெற்றோர் வெளிநாட்டில் பணிபுரிவதுடன் ஹட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தக்கியிருந்து கல்வி கற்று வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன், ஆறு நண்பர்களுடன் நேற்று மாலை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அட்டையின் கடியால் ரத்தம் கசிந்ததை கண்டு கால்கலை கழுவ முற்பட்டபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடும் பணியினை முன்னெடுத்த போதும், பின்னர் தேட முடியாத நிலையில், இன்று காலை தேடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த சிறுவன் மாயம்; நண்பர்களுடன் புகைப்படம் எடுக்க சென்றபோது துயரம் ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று, பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவனின் பெற்றோர் வெளிநாட்டில் பணிபுரிவதுடன் ஹட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தக்கியிருந்து கல்வி கற்று வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த சிறுவன், ஆறு நண்பர்களுடன் நேற்று மாலை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அட்டையின் கடியால் ரத்தம் கசிந்ததை கண்டு கால்கலை கழுவ முற்பட்டபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுகிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடும் பணியினை முன்னெடுத்த போதும், பின்னர் தேட முடியாத நிலையில், இன்று காலை தேடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்