• Aug 26 2026

புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம்!

Chithra / Aug 26th 2026, 11:46 am
image


யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.


கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலர் குறித்த சடலத்தை அவதானித்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை.


சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலர் குறித்த சடலத்தை அவதானித்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை.சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement