இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 9,158 ஏனைய தரநிலை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் கௌரவத்தை மேம்படுத்தும் வகையிலும், இராணுவத்தினரின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I ஆம் நிலைக்கு 260 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II ஆம் நிலைக்கு 1211 பணிநிலை சார்ஜென்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பணிநிலை சார்ஜென் நிலைக்கு 1704 சார்ஜென்களும், 2339 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 2204 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், 1440 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணிகளிலில் இருந்து தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9,158 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 9,158 ஏனைய தரநிலை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் கௌரவத்தை மேம்படுத்தும் வகையிலும், இராணுவத்தினரின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I ஆம் நிலைக்கு 260 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II ஆம் நிலைக்கு 1211 பணிநிலை சார்ஜென்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் பணிநிலை சார்ஜென் நிலைக்கு 1704 சார்ஜென்களும், 2339 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 2204 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், 1440 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணிகளிலில் இருந்து தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.