கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளை பிரிவுகளினால் பணிச்சங்கேணி, சோபா தீவு (Soba Island), பொல்மல்குடா, கிண்ணியா, சூடைகுடா, ஓட்டமாவடி, அளம்பில், புதுக்குடியிருப்பு மற்றும் சுண்டிக்குளம் உள்ளிட்ட கடலோர மற்றும் கடல் பரப்புகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போதே இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 8 படகுகள், 2 வல்லங்கள் மற்றும் 7 உழவு இயந்திரங்கள் என்பன அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட முறைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி இவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள், வணிக ரீதியிலான வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், வாகனங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு, கொட் பே (Cod Bay), மூதூர், வாழைச்சேனை, குச்சவெளி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிடமும், புல்மோட்டை நிலையத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கிழக்கு மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளை பிரிவுகளினால் பணிச்சங்கேணி, சோபா தீவு (Soba Island), பொல்மல்குடா, கிண்ணியா, சூடைகுடா, ஓட்டமாவடி, அளம்பில், புதுக்குடியிருப்பு மற்றும் சுண்டிக்குளம் உள்ளிட்ட கடலோர மற்றும் கடல் பரப்புகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போதே இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 8 படகுகள், 2 வல்லங்கள் மற்றும் 7 உழவு இயந்திரங்கள் என்பன அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.தடைசெய்யப்பட்ட முறைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி இவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன், இந்த நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள், வணிக ரீதியிலான வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், வாகனங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு, கொட் பே (Cod Bay), மூதூர், வாழைச்சேனை, குச்சவெளி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிடமும், புல்மோட்டை நிலையத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.