• Jun 14 2026

வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

Chithra / Jun 12th 2026, 2:06 pm
image

திருகோணமலை - வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெருகல் - பூநகர் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று (12) இடம்பெற்றது.


இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


இதன்போது பூஜை வழிபாடுகள் இடம்பெற்று படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக, ஆத்ம சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன பிரார்த்தனை இடம்பெற்றது. இதன் பின்னர் உயிரிழந்தவர்களின் திரு உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


வெருகல் -ஈச்சிலம்பற்று அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்காக அத்தியவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வழியில் அரச அதிகாரிகள் மூன்று பேர் உட்பட 21 பொதுமக்கள் சேருவில-மஹிந்தபுர பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.


1986.06.12 அன்று இடம்பெற்ற இவ் படுகொலை சம்பவத்தை நினைவு கூறும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு திருகோணமலை - வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெருகல் - பூநகர் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று (12) இடம்பெற்றது.இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது பூஜை வழிபாடுகள் இடம்பெற்று படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக, ஆத்ம சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன பிரார்த்தனை இடம்பெற்றது. இதன் பின்னர் உயிரிழந்தவர்களின் திரு உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.வெருகல் -ஈச்சிலம்பற்று அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்காக அத்தியவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வழியில் அரச அதிகாரிகள் மூன்று பேர் உட்பட 21 பொதுமக்கள் சேருவில-மஹிந்தபுர பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.1986.06.12 அன்று இடம்பெற்ற இவ் படுகொலை சம்பவத்தை நினைவு கூறும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement