• May 23 2026

கற்பிட்டி கடற்பரப்பில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

Chithra / Oct 2nd 2025, 7:53 pm
image


புத்தளம் - கற்பிட்டி கடற்பரப்பில் சுமார் 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனை செய்தபோதே 4 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கைதான சந்தேக நபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும், சந்தேக நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


கற்பிட்டி கடற்பரப்பில் 4 கிலோ தங்கம் பறிமுதல் புத்தளம் - கற்பிட்டி கடற்பரப்பில் சுமார் 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனை செய்தபோதே 4 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் கைதான சந்தேக நபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement