நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதிலும் 38 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதி ஆபத்துள்ள டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மே மாதத்தில் மாத்திரம் 2,200 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இவர்களில் 47 வீதமானோர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை ஒழிக்கும் நோக்கில் நுளம்பு பெருகும் இடங்களை இலக்கு வைத்து எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது டெங்கு காய்ச்சல் தொடர்பில் 15 மாவட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் நுளம்பு பெகும் இடங்களை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் அதி ஆபத்துள்ள 38 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம். நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் நாடு முழுவதிலும் 38 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதி ஆபத்துள்ள டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.இந்த நிலையில் மே மாதத்தில் மாத்திரம் 2,200 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். இவர்களில் 47 வீதமானோர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை ஒழிக்கும் நோக்கில் நுளம்பு பெருகும் இடங்களை இலக்கு வைத்து எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போது டெங்கு காய்ச்சல் தொடர்பில் 15 மாவட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும் நுளம்பு பெகும் இடங்களை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.