க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மெதடிஸ்த மகளீர் கல்லூரி 35 9ஏ சித்திகளை தட்டித் தூக்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலேயே மெதடிஸ்த மகளீர் கல்லூரியில் 35 9ஏ சித்திகளும் 13 8ஏபி சித்திகளும் 03 8ஏசி சித்திகளும் 13 7ஏ2பி, 7ஏபிசி,7ஏ2சி, 6ஏ3பி, 6ஏ2பிசி, 6ஏபி2சி, 5ஏ4பி என சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மெதடிஸ்த மகளீர் கல்லூரியில் 160 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
பெறுபேறுகளின் அடிப்படையில் மெதடிஸ்த மகளீர் கல்லூரியில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதற்காக எங்கள் மாணவ, மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் சிரத்தை இனிமையான வெற்றியாக இன்று மிளிர்கிறது. என்று கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
மெதடிஸ்த மகளீர் கல்லூரியில் 35 9ஏ சித்திகள் - பெருமை கொள்ளும் கல்விச் சமூகம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மெதடிஸ்த மகளீர் கல்லூரி 35 9ஏ சித்திகளை தட்டித் தூக்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே மெதடிஸ்த மகளீர் கல்லூரியில் 35 9ஏ சித்திகளும் 13 8ஏபி சித்திகளும் 03 8ஏசி சித்திகளும் 13 7ஏ2பி, 7ஏபிசி,7ஏ2சி, 6ஏ3பி, 6ஏ2பிசி, 6ஏபி2சி, 5ஏ4பி என சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுள்ளனர். மெதடிஸ்த மகளீர் கல்லூரியில் 160 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பெறுபேறுகளின் அடிப்படையில் மெதடிஸ்த மகளீர் கல்லூரியில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதற்காக எங்கள் மாணவ, மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் சிரத்தை இனிமையான வெற்றியாக இன்று மிளிர்கிறது. என்று கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.