• May 19 2025

இலங்கையில் புதிதாக நியமிக்கப்படவுள்ள 304 ஆயுர்வேத மருத்துவர்கள்

Chithra / May 19th 2025, 9:10 am
image

 

இலங்கையின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று ஆணையாளர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி வெளியீட்டைத் தொடர்ந்து, முறையான விண்ணப்ப முறை மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் 2025 ஒகஸ்ட் 1 முதல் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாகவும் ஆணையாளர் அறிவித்துள்ளார். 

இலங்கையில் புதிதாக நியமிக்கப்படவுள்ள 304 ஆயுர்வேத மருத்துவர்கள்  இலங்கையின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இது தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று ஆணையாளர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.குறித்த வர்த்தமானி வெளியீட்டைத் தொடர்ந்து, முறையான விண்ணப்ப முறை மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் 2025 ஒகஸ்ட் 1 முதல் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாகவும் ஆணையாளர் அறிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement