போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தக் கடத்தல்காரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வந்ததாகவும், இது அனைவரும் அறிந்த ஒரு பகிரங்க ரகசியம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால,
போதைப்பொருள் கடத்தலில் முதன்மையாக இருப்பது இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே. இவர்களில் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்து வருகிறோம். என்றார்.
வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ள 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தக் கடத்தல்காரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வந்ததாகவும், இது அனைவரும் அறிந்த ஒரு பகிரங்க ரகசியம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, போதைப்பொருள் கடத்தலில் முதன்மையாக இருப்பது இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே. இவர்களில் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்து வருகிறோம். என்றார்.