பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக்கு நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணிநேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்து சாதித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் 11ம் வகுப்பு பயின்று வரும் 17 வயதுடைய மகள் ஈஸ்வரியே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்த போதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், இதற்கு முன்பு கடலில் நீந்தி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் நீந்துவதற்கு பார்வை தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக் நீரிணை கடலை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.
அனுமதி கிடைத்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர், மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.
திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதியை சென்றடைந்தார்.
இதன் மூலம் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளியான ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பார்வை ஒரு தடையல்ல பாக் நீரிணையை 11 மணி நேரத்தில் நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக்கு நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணிநேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்து சாதித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் 11ம் வகுப்பு பயின்று வரும் 17 வயதுடைய மகள் ஈஸ்வரியே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்த போதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், இதற்கு முன்பு கடலில் நீந்தி தனது திறமையை நிரூபித்துள்ளார்.இந்நிலையில் நீந்துவதற்கு பார்வை தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக் நீரிணை கடலை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.அனுமதி கிடைத்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர், மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதியை சென்றடைந்தார். இதன் மூலம் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார்.தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளியான ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.