திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு! இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்! போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதே நேரம் நாளை (19) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெறவுள்ள நிலையில் மாவட்ட செயலகம் முன்பாகவே குறித்த போராட்டம் இடம்பெறுகிறது.
பொலிஸார் போராட்ட காரர்களின் இடத்தை அகற்ற முற்பட்ட போதும் கூட அகற்றப்படவில்லை.சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக் கோரியே இப் போராட்டம் இடம்பெறுகின்றது.
முத்து நகர் விவசாயிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் குதித்துள்ளனர். இதே நேரம் நாளை (19) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெறவுள்ள நிலையில் மாவட்ட செயலகம் முன்பாகவே குறித்த போராட்டம் இடம்பெறுகிறது.பொலிஸார் போராட்ட காரர்களின் இடத்தை அகற்ற முற்பட்ட போதும் கூட அகற்றப்படவில்லை.சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக் கோரியே இப் போராட்டம் இடம்பெறுகின்றது.