• Sep 19 2025

இந்தியமீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

shanuja / Sep 18th 2025, 4:46 pm
image

கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07  இராமேஸ்வரம் மீனவர்களையும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர். இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் கடந்தமாதம் 20 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 03.09.2025வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் அன்றையதினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் நேற்றுவரை (17) விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை இன்றுவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.


மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 மீனவர்களது விளக்கமறியலை 24ஆம் திகதிவரை நீடித்து நீதவான்  உத்தரவை பிறப்பித்தார்.

இந்தியமீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07  இராமேஸ்வரம் மீனவர்களையும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர். இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.இவர்கள் கடந்தமாதம் 20 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 03.09.2025வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் அன்றையதினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் நேற்றுவரை (17) விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை இன்றுவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 மீனவர்களது விளக்கமறியலை 24ஆம் திகதிவரை நீடித்து நீதவான்  உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement