• Sep 19 2025

யாழில் வீதி விபத்துக்களில் இறப்போர் அதிகரிப்பு - ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு

Chithra / Sep 18th 2025, 2:31 pm
image

 

 

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில்,

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலாளர் எம்.பிரதீபன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது , யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக  விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறான பகுதிகளில் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது குறித்தும் எப்பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை தேவைப்படுகின்றது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டிருந்தார்.

மேலும், தீவு பகுதிகளுக்குரிய பாதுகாப்பான கடல்போக்குவரத்து பயணம் மற்றும் அதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்தார்.

இதன்போது யாழ்ப்பாணத்தில்  அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இறப்புக்களும் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸாரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் முச்சக்கர வண்டிகளால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து சரியான முறையில் லேணர்ஸ் இயங்குகிறதாக சாரதி அனுமதிப் பத்திரங்கள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என அமைச்சர்  சந்திரசேகர் கேள்வி எழுப்பினார். 

இதேவேளை, நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தியதான பொதுபோக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து மற்றும் சந்தை நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து என்பன பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.



யாழில் வீதி விபத்துக்களில் இறப்போர் அதிகரிப்பு - ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு   யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில்,கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலாளர் எம்.பிரதீபன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.இதன்போது , யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக  விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.எவ்வாறான பகுதிகளில் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது குறித்தும் எப்பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை தேவைப்படுகின்றது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டிருந்தார்.மேலும், தீவு பகுதிகளுக்குரிய பாதுகாப்பான கடல்போக்குவரத்து பயணம் மற்றும் அதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்தார்.இதன்போது யாழ்ப்பாணத்தில்  அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இறப்புக்களும் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸாரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் முச்சக்கர வண்டிகளால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து சரியான முறையில் லேணர்ஸ் இயங்குகிறதாக சாரதி அனுமதிப் பத்திரங்கள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என அமைச்சர்  சந்திரசேகர் கேள்வி எழுப்பினார். இதேவேளை, நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தியதான பொதுபோக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து மற்றும் சந்தை நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து என்பன பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement