• Oct 26 2026

ஐந்தே நாட்களில் சிக்கிய 200 வணிகர்கள்! நாடு முழுவதும் தீவிர சோதனை! 5 இலட்சம் ரூபாய் அபராதம்

Chithra / Oct 26th 2026, 11:12 am
image


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய சுமார் 200 வணிகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.


கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக, பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய வர்த்தக நிலையங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வணிக நிறுவனங்கள் இந்தச் சோதனைகளின் போது இலக்கு வைக்கப்பட்டுள்ளன.


இதன்போது அரிசி, சீனி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், கோதுமை மா, பேக்கரி உற்பத்திகள், சிற்றுண்டிகள், ஆடைகள், மின்சாதனங்கள் மற்றும் கைபேசி உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.


காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, மொணராகலை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மேலும், கோதுமை மாவின் சந்தை இருப்பு மற்றும் அதன் விற்பனை நிலைமைகள் தொடர்பிலும் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இந்தச் சோதனைகளின் போது சட்டவிதிமுறைகளை மீறியதாக அடையாளம் காணப்பட்ட வணிகர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த அம்பாறை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த பல்பொருள் அங்காடியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு கிலோகிராம் அரிசி 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த விதிமீறல் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது.


ஐந்தே நாட்களில் சிக்கிய 200 வணிகர்கள் நாடு முழுவதும் தீவிர சோதனை 5 இலட்சம் ரூபாய் அபராதம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய சுமார் 200 வணிகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய வர்த்தக நிலையங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வணிக நிறுவனங்கள் இந்தச் சோதனைகளின் போது இலக்கு வைக்கப்பட்டுள்ளன.இதன்போது அரிசி, சீனி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், கோதுமை மா, பேக்கரி உற்பத்திகள், சிற்றுண்டிகள், ஆடைகள், மின்சாதனங்கள் மற்றும் கைபேசி உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, மொணராகலை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், கோதுமை மாவின் சந்தை இருப்பு மற்றும் அதன் விற்பனை நிலைமைகள் தொடர்பிலும் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்தச் சோதனைகளின் போது சட்டவிதிமுறைகளை மீறியதாக அடையாளம் காணப்பட்ட வணிகர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த அம்பாறை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குறித்த பல்பொருள் அங்காடியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு கிலோகிராம் அரிசி 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த விதிமீறல் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement