தேங்காய் தலையில் விழுந்து இரண்டு வயதேயான குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வென்னப்புவ - பண்டிரிப்புவ பகுதியில் 2 வயதான ஜீவன் குமார சஸ்மித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் நீர்கொழும்பு - வென்னப்புவ பகுதியில் கடந்த 14 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
வென்னப்புவ - பண்டிரிப்புவ பகுதியில் தாய், தந்தை இருவரும் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டில் பணி புரிந்த நேரத்தில் அவர்களது குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்துள்ளது.
2 வயதேயான பிஞ்சுக் குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை பலத்த காயமடைந்துள்ளது.
கண் இமைக்கும் நொடிப்பொழுதில் தேங்காய் விழுந்ததில் குழந்தை சுயநினைவை இழந்த நிலையில், சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்ததால், குழந்தை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலை குழந்தை உயிரிழந்துள்ளது.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட நிலையில் வசித்து வரும் குடும்பத்தினர், குழந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட வசதி இல்லாததால், குழந்தையின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் தலையில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்த மறுபுறம் குழந்தையின் இறுதிச்சடங்கை நடத்த முடியாமல் தவித்த குடும்பத்தின் நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேங்காய் தலையில் விழுந்து 2 வயதேயான குழந்தை பலி வசதியின்றி மருத்துவமனையில் அடக்கம் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் தேங்காய் தலையில் விழுந்து இரண்டு வயதேயான குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வென்னப்புவ - பண்டிரிப்புவ பகுதியில் 2 வயதான ஜீவன் குமார சஸ்மித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நீர்கொழும்பு - வென்னப்புவ பகுதியில் கடந்த 14 ஆம் திகதி பதிவாகியுள்ளது.வென்னப்புவ - பண்டிரிப்புவ பகுதியில் தாய், தந்தை இருவரும் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டில் பணி புரிந்த நேரத்தில் அவர்களது குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்துள்ளது. 2 வயதேயான பிஞ்சுக் குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை பலத்த காயமடைந்துள்ளது. கண் இமைக்கும் நொடிப்பொழுதில் தேங்காய் விழுந்ததில் குழந்தை சுயநினைவை இழந்த நிலையில், சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்ததால், குழந்தை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலை குழந்தை உயிரிழந்துள்ளது. வறுமைக்கோட்டிற்குட்பட்ட நிலையில் வசித்து வரும் குடும்பத்தினர், குழந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட வசதி இல்லாததால், குழந்தையின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தேங்காய் தலையில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்த மறுபுறம் குழந்தையின் இறுதிச்சடங்கை நடத்த முடியாமல் தவித்த குடும்பத்தின் நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.